செவ்வாய், 15 செப்டம்பர், 2015

வேதாந்தம் ஓர் அறிமுகம் - 4

[3] ஜீவ-ஈஷ்வர சம்பந்தம்:
  6 ஐக்கிய சம்பந்தம் (ஒன்று)
        6 ப்ரமாணம் => அறிவைக் கொடுக்கும் கருவி
        6சாஸ்திரம் சப்த ப்ரமாணம் (சொற்களினால் பெறப்படும் ஞானம்)
         
       => மகா வாக்கியம் (முக்கிய வாக்கியம்)
ஜீவனையும் ஈஷ்வரனையும் சம்பந்தப்படுத்தி ஐக்கியப்படுத்துகிறது. உபநிஷத்துக்களில் மகா  வாக்கியங்கள் உள்ளன.
மகா வாக்கிய லக்ஷணங்கள் :
   Ø  ஜீவ ஈஷ்வர ஐக்கிய போதக வாக்கியம்
   Ø  அகண்டார்ந்த போதக வாக்கியம்
* சமன்படுத்துவதால் மகா வாக்கியத்தை சமன்பாடு எனவும் அழைக்கலாம்.
சமன்பாடு :
     எங்கு மேலோட்டமான(தோற்றத்தில்) வேறுபாடு இருந்து உண்மையில் வேறுபாடு       இல்லையோ அங்கு சமன்பாடு தேவைப்படுகிறது. E.g: 13 – 5 = 4 + 4.
(சிறு வயதில் நாம் பார்த்த அண்டை வீட்டாரின் குழந்தையை பல வருடம் கழித்து பார்க்கும் போது)







              *  சரீர ஆதாரம் ஆத்மா, ப்ரபஞ்ச ஆதாரம் ப்ரம்மம்.
              *  மாயையில் பார்க்கும் போது,
                     §  ஜீவன் கர்மத்தை செய்பவன் (கர்த்தா, போக்தா)
                     §  ஈஷ்வரன் கர்ம பலனைக் கொடுப்பவர் (அகர்த்தா, அபோக்தா).           
  *  வாச்சியார்தத்தில்(அனாத்மா) ஐக்கியமல்ல, லக்ஷியார்த்தத்தில்(சத், சித்) ஐக்கியம்.

[4] பல விசார:

 பிரயோஜனம் – மோக்ஷம்
 உபநிஷத்துக்களின் முக்கிய உபதேசம்: மகா வாக்கியம், தகுதிகள், பிரயோஜனம்









ஜீவன் முக்தி
உயிரோடு இருக்கும் போதே விடுதலை அடைதல் (பயம், ஆசை, காம, குரோத எண்ணங்களில் இருந்து விடுபடுதல்)

விதேக முக்தி
ஞானி தன் தேகம் சென்ற பிறகு மீண்டும் பிறப்பெடுக்காத தன்மை விதேக முக்தி. விதேக முக்தி என்றாலே எல்லா கர்மத்திலிருந்தும் முக்தி எனப்படுகிறது. ஜீவன் முக்தியை தொடர்ந்து வருவது விதேக முக்தி.
   *  அக்ஞானி – மீண்டும் ஸ்தூல சரீரம் எடுத்து சம்சாரத்தை தொடர்கிறான்.

=> மூன்று விதமான கர்மங்கள் [Three types of karma]:

             (1) சஞ்சித கர்மம்      (2) ப்ராரப்த கர்மம்       (3) ஆகாமி கர்மம்
   *  எல்லா வித கர்மத்திற்கும் பலன் உண்டு.
   *  பலன் 2 வகைப்படும்


*  சுக துக்கத்தை கொடுத்த பின்னர், புண்ணிய பாவம் அழிந்து (தீர்ந்து) விடும்.
*பாவ புண்ணியம் எப்போது வேண்டுமானாலும் வெளிப்படலாம். உடனடியாக வெளிப்பட வேண்டுமென்ற அவசியம் கிடையாது.
*பாவ புண்ணியம் அனுபவிக்கும் பொருட்டு உடலும், உலகமும் (அதற்கான சூழ்நிலையும்) கொடுக்கப்படுகிறது. பொருள் (உலகம்) இல்லாமல் உடலுடன் மட்டும் சுக துக்கம் அனுபவிக்க இயலாது.
* விதவிதமான சுக துக்கங்களைக் கொடுக்க பாவ புண்ணியத்திற்கு விதவிதமான உடல் தேவைப்படுகிறது. ஆகவே மறுபிறப்பு உண்டாகிறது.
*உடல் என்பது சுக போக ஆயதனம் (கருவி). எந்தெந்த பாவ புண்ணியம் தீர்ப்பதற்காக உடல் கிடைத்ததோ அதுவரை அந்த உடல் இருக்கும். பாவ புண்ணியம் தீர்ந்து விட்டால் கர்மம் தீர்ந்துவிடுகிறது. இந்த உடல் அழிந்து விடுகிறது.

கர்மம்

    சஞ்சித கர்மம் ---> ப்ராரப்த கர்மம் ---> ஆகாமி கர்மம்

Ø  ஒவ்வொரு ஜீவனும் கர்ம மூட்டையோடு இருக்கிறான். ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள கர்மத்திற்கு சஞ்சித கர்மம் என்று பெயர். சிதம் – collections
Ø  சஞ்சிதத்திலிருந்து வெளிப்படும் ஒரு சிறு பகுதி ப்ராரப்தம். சஞ்சிதத்தில் சேர்ந்த அனைத்து பாவ புண்ணியங்களையும் ஒரே உடலில் தீர்க்க முடியாது.  ஆகவே  ஒரு குறிப்பிட்ட சுக துக்கத்தை தீர்ப்பதற்காக ஒரு குறிப்பிட்ட உடல் கொடுக்கப்படுகிறது. ஆகவே ப்ராரப்த கர்மத்தை தீர்க்க ஜீவனுக்கு உடல் கொடுக்கப்படுகிறது. நம் முயற்சிக்கு அப்பாற்பட்டதான விஷயங்கள் இதன் மூலமே கிடைக்கின்றன (eg: parents, body shape, male – female, life time etc….)

Ø  ப்ராரப்த கர்மத்தை தீர்க்க கொடுக்கப்படும் உடலால் புதிதாக செய்யப்படுவது ஆகாமி கர்மம் ஆகும். கடைசியில் ஆகாமி, சஞ்சித கர்மத்தோடு சேர்ந்து கொள்கிறது. மீண்டும் ப்ராரப்தம் வெளிப்படுகிறது

=> ஞானியின் நிலை

கர்ம பலனை தீர்க்க கொடுக்கப்பட்ட உடல்தான் கர்மத்தை அனுபவிக்கிறது. கர்த்தாவிற்குத் தான் கர்மம். இந்த உடல்தான் கர்த்தா, நான் அல்ல என்று புரிந்து கொண்ட ஞானிக்கு ஆகாமி கர்மம் கிடையாது.

கர்மம் அகங்காரத்தை சார்ந்தே உள்ளது. ஞானி அறிவினால் அகங்காரத்திலிருந்து தன்னை பிரிப்பதால், அகங்காரம் அழிந்து விடுகிறது. இதனால் அக் கர்மத்திற்கு சார்ந்து இருப்பதற்கு இடமில்லாமல் போவதால் சஞ்சித கர்மம் நாசமடைகிறது. ஆகாமி வருவதில்லை.

ஆனால் ப்ராரப்தம் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டுவிட்டதால் அதை ஞானி தடுப்பதில்லை. அனுபவித்து தீர்க்கிறான். அதாவது சரீரம் அனுபவித்து தீர்க்கிறது.

ஞானியானவன் அதனுடைய ஆஷ்ரயம் (ஸ்தானத்தை) நீக்குவதன் மூலமாக சஞ்சித கர்மத்தை நீக்கி விட்டான். ஆகாமி கர்மம் 'நான் செய்கிறேன்' எனும் கர்த்ருத்வம் இல்லாததனால் வருவதில்லை. ப்ராரப்தம் அனுபவித்து தீர்க்கப்படுகிறது. தீர்க்கும் போது அதாவது உடலை பிரியும் போது ஞானி விதேக முக்தி அடைகிறான்; மீண்டும் பிறப்பதில்லை.