சுவாசிக்கும் நிழல்
நாசத்தை நிர்ணயித்துப் பிறந்து
அழிவை அடையப்பெற வளர்ந்து
ஒவ்வொரு கணமும் தேய்ந்து
வயோதிகத்தில் சோர்ந்து
தேக வனப்பு குன்றி
தோல் தளர்ந்து சுருங்கி
உறுப்புகளின் வலிமை ஜீரணித்து
மரணமென்னும் நிச்சயத்தை அடைந்து
அழுகி காற்றில் கரைய எந்நேரமும் காத்திருக்கும்
நானற்ற இந்த உடல் இயல்பினால் பிரேதமே!
-- அனுஷா
——————————————————————