எண்ணிலடங்கா ஏகம்
மழைத்துளிகள் வீழ்ந்து தவழ்ந்து
சேரும் நீரோடை,
ஓடைகள் பல சேர்ந்து கைகோர்த்து
புரண்டு நதியாகி,
ஊரூராய் ஓடிக் கரைதொட்டு
தாகம் தணிக்கும் குடிநீராய்,
பசி தீர்க்கும் பயிர்கள் செழிக்க
வயல்வெளியில் பாசனமாய்,
கடலில் கலந்து மாய்ந்த இப்பயணம்
மறுபிறப்பைத் தொடங்க மீண்டும் மேகமாய்.
எண்ணிலடங்கா நாமரூபம் கொண்ட
நீர் எனும் ஏகம்.
-- அனுஷா
——————————————————————