தந்தை
அலைந்துகொண்டேயிருக்கிறாய்
ஆதங்கப்படுகிறாய் உத்தேசமில்லாமல்
இலக்கின்றி ஓடியதால்
ஈன்றாரில் தந்தையை தொலைத்து
உரிமை மறந்தவனாய் வாழ்ந்து
ஊர்க்கதைப் பேசி தன் கதை மறந்து
எடுப்பார் கைப்பிள்ளையாய் காலம் கடத்தி
ஏறக்குறைய பயணம் முடியும் தருவாயில்
ஐம்புலனின் ஆட்டமெல்லாம்
ஒடுங்கி அடங்க
ஓர் கேள்வி தொக்கி நிற்கிறது …
உலகைப் படைத்த மனமென்னும் அன்னையே,
உயிர் கொடுத்தத் தலைவனை மறந்து
மெய்பொருள் புரியாமல் நிற்குதென் ஜீவன்!
-- அனுஷா
—————————————————————————