மெய்யுணர்வுச் சந்தம்

என்னை அனுபவித்தே

அனைத்தும் உயிர்பெறுகின்றன.


என்னில் பிறந்து,

என்னுள் மறைகின்றன.

வாழும் நொடிகளிலும்

எனைச் சார்ந்தே சுழல்கின்றன.


நொடிப்பொழுது ஆயுள்கொண்டு

யுகயுகமாய் வாழ்ந்தாலும்

பிறவாத என் தயவில்

தனதிருப்பை அடைகின்றன.


————————————————