ஆலம்பனம்

கரடு முரடாயிருந்து 

கங்கையெனும் உளி செதுக்கியதால்

மறைந்திருந்த சுயம் வெளிப்பட்டு

கடவுளாய் வீற்றிருக்கிறாய்.


என்னை உருவாக்கியவன் நீ என எண்ணியிருக்க

என்னிடமிருந்தே உருவானவன் நீ என மறைகள் கூற

திடுக்கிட்டு விழித்தபோது

சுழற்சியின் மையத்தில் 

முடிவிலியாய் நான்.


அழியாத விதையாய்

சப்தங்களின் மெளனமாய்

மறையாத சாட்சியாய்

விளக்கப்பட முடியாதவனாய்

விளக்கிக் கொண்டிருப்பவனாய் 

விளக்கமுமாய் நான்.


                                         -- அனுஷா

———————————————————