நியதிச் சுழல்
சில்காற்று வெம்மையை தணிக்கத் தொடங்கியது,
பகலிலும் கடுங்குளிர் பரவி உறைந்தது.
புறங்கடை அலங்கரித்த தொட்டிச் செடியில்
பசும்இலைகள் வெட்கிச் சிவப்பாகியது.
பழுத்துச் சுருங்கி உறைபனியில் அழுகியது.
இருந்தது இப்பொழுது இல்லாமல் ஆனது.
மடிந்துவிட்டதென்று எண்ணிக்கொண்டேன்.
உறைகுளிர் மீண்டும் வெப்பமென்றாகியது,
உறங்கிக் கிடந்தது விழித்தது போலும்,
பச்சை வர்ணமொன்று துளிர்த்து முளைத்தது.
‘இதுயென்ன உனது மறுபிறப்பா’ என்றேன்?
தொட்டியின் மண் பாதுகாக்கப்படும்வரை,
எனது மாற்றங்களுக்கென்றும் முடிவில்லை என்றதது.
———————————————————