தரிசனம்

தென் திசையமர் ஈசனும்

ஆசையறு புத்தனும்

இதழ் மலர்ந்ததுன் பொருட்டே


சுயமெய்மை புரிந்தொன்றி

தன் மனையமர்ந்த ஞானியரின் 

விழி மிளிர்வதுன் பொருட்டே


ஆனந்தப் பரமாயுதித்த

கண்ணனின் அணியமைந்த

புன்முறுவலும் உனைக்காட்டுதே


உனைத் தீண்டிய அற்ப நொடிகள்

மீண்டும் வாய்க்கயெண்ணி

வெளித்துழாவி களைத்த மானுடம்


பொதியற்ற முழுநிறை தன்னை

பூஜ்ஜியத் தொலைவில் காண

வாய்த்தவர் சிலரேயன்றோ!


                                             -- அனுஷா

———————————————————