மாயப் புதிர்
அடுத்த கணம் தோன்றும் எண்ணம்
எதுவென்று தெரியாது.
இந்த கணம் ஏன் இந்த எண்ணம்
அதுவும் கட்டுப்பாட்டிலில்லை.
கோபமா சாந்தமா அழுகையா
எந்த சூழ்நிலைக்கு எந்த வெளிப்பாடு
எதுவும் வரையறைக்கு வரவில்லை.
நாள்முழுதும் சிந்தித்த நிச்சயத்தை
ஒருநொடியில் மறுதலிக்கும்
காரணமும் புரிவதில்லை.
எனக்கே விளங்காத ஒன்றை
நானென ஏற்றதன்
பொருளென்ன அறியேனே!
தானெனும் அபிமானம்
தவறாகத் தடம்பதித்து
மயங்கிபோய்ச் சுழல்கிறதே!
மாயங்கள் பலகாட்டி
உன்னை நானாக்கி
எப்போதும் வெல்கிறதே!
-- அனுஷா
———————————————