முடிவற்ற நிகழ்

நிகழ்தருணம் நான்!

கடந்தது எதிர்வருவது எதுவும்

என்னிடமில்லை.


எத்தருணமும் நான்!

கடந்ததும் எதிர்வருவதும்

என்னில் மிளிர்வதால்.


முரணாகப் படுகிறதே எனில்

ஆம்! இல்லை!


எத்தருணமும் நிகழ்வது 

நிகழில் என்பதால்,

நிகழும் நான்.


நிகழே அனைத்து தருணத்தின்

ஆதாரமாகிப் போவதால்,

எத்தருணமும் நான்.


முடிவற்ற நிகழாய்,

நான் நீங்கிய தருணமில்லை.

தருணங்கள் ஒடுங்கியபோதும்

முடிவிலியில் மாற்றமில்லை.


                                -- அனுஷா

———————————————————————