நிகழ் விரும்பா நெஞ்சம்
எதிர்வரும் நொடியின் பிறப்பை ருசிக்க
தனது நிகழை இழக்கத் துடிக்கும்
மனதின் இயல்பு பழகிய ஒன்றே!
கடந்ததில் எவ்வளவோ மகிழ் தருணமிருந்தும்
கசக்கிப் பிழியும் ரணங்களைத் தேர்ந்தெடுத்து
லாவகமாய் நிகழ் தொலைக்கும் நெஞ்சமும் பழக்கமுண்டு!
உடலெனும் ஆடையை ரசித்து உடுத்தி
காலத்தின் பிடியில் கொடுத்துத் துவைத்து
நிறம் மங்கிக் கிழிந்து தொங்கியும்
விட விரும்பாத மனதின் மர்மம்தான் புரியவில்லை?
————————————————————————————————