ஒப்புமை
கோடையில் துளிர்த்து பூத்து காய்த்து
பூசணிகளாய் பல்கிப் பெருகிய ஒற்றை விதை,
குளிர்பனியில் உறைந்து பன்முகம் கருகி
மண்ணாய் மட்கி மீண்டும் விதைகளாய்…
ஆழ்துயிலின் மூலக்காரணி
அறிபவனாய் விழித்து அறிபொருளைப் படைத்து
செய்வோன் நுகர்வோனென ஆர்பரித்து
ஒடுக்கத்தில் மீண்டும் உருவற்ற வித்தாய்…!
-- அனுஷா
———————————————————————