சுபாவம்?

பிரகாசிக்கும் தீபத்தில் விழுந்தழிய

உற்சாகமாய் இலக்கடையும் அந்திப்பூச்சி.


வேடமிட்டுத் திரியுமிந்த 

உலகெனும் சாகரத்தில்,

நீர்ப்போல சாரமாய் விளங்கும்

ஆதாரத்தின் இருத்தலறியாது,

நூறு ஆயிரம் லட்சங்களாய் 

வந்துமறையும் எண்ணஅலைகளில், 

மூழ்கியழிவதை இலக்காய் கொண்டு

மானுடத்தை வஞ்சிக்கும் மாயமனம். 


தீபம் நோக்கி விரையும் பூச்சிக்கும்

எண்ணத்தை நோக்கிச் சுழலும் மனதிற்கும்

உத்வேகத்தையும் மூடமையும் கொடுத்ததெது?


                                               -- அனுஷா

—————————————————————————