தொலைந்து போதல்


பிரவாகித்தோடும் எண்ணங்களில் 

தன்னைத் தொலைத்தவன்,

தானெனல் தொலைப்பதன்

அளவையைத் தேடினான்.


தேடுவதனாலேயே தனித்துத் தெரிந்து,

தேடுபவனை தொலைப்பதிலும் பெரும்பாடுற்றான்.


தேடும் வினையினால்

முயல்பவன் உருவாகி,

தொலைக்கும் தூரம் 

மேலும் நீண்டது. 


தேடிச் சலித்து,

உருவாக்கித் தோற்று,

சாக்ஷியின் முன்னிலையில்

மண்டியிட்டு அடங்கினான்.


சரண்தனில் தானெனல் பொசிங்கியதனால்

சாக்ஷியாய் நின்றவனாய் அவனேயானான்!

——————————————————