எனதிறை
அதுவில் நிலைத்தவன்
அதுவாய் சுடர்பவன்
அதற்குப் பிறிதாய் எதுவுமிலாதவன்!
எதுவில் அமர்ந்ததனால்
அவன் அதுவோ
அதுவில் எமதும் அமரட்டும்!
எதுவாய் ஒளிர்வதனால்
அவன் இறையோ
அதுவாய் எமதும் சுடரட்டும்!
எதன் சாயலாய்
அது பலவோ
அதனில் எமதும் கலக்கட்டும்!
————————————————-
