செவ்வாய், 20 ஜூலை, 2021

ஸாங்கிய யோகம் 2.31 - 2.38

।।2.31।। கடமையிலிருந்து வழுவக் கூடாது:

स्वधर्ममपि चावेक्ष्य विकम्पितुमर्हसि

धर्म्याद्धि युद्धाच्छ्रेयोऽन्यत् क्षत्रियस्य विद्यते ।। ३१

ஸ்வத4ர்மமபி சாவேக்ஷய விகம்பிதுமர்ஹஸி ।।

4ர்ம்யாத்3தி4 யுத்3தா4ச்ச்2ரேயோऽந்யத் க்ஷத்ரியஸ்ய வித்3யதே ।। 31


स्व-धर्मम्    ஸ்வ-4ர்மம்  விஷேஷ தர்மத்தை(ஒருவனது கடமை

अवेक्ष्य अपि   அவேக்ஷய அபி   நோக்குமிடத்தும்   विकम्पितुम्     விகம்பிதும்  நடுங்க    

अर्हसि   அர்ஹஸி  அர்ஹதை கிடையாது   हि  ஹி  ஏனென்றால்   

धर्म्यात् युद्धात्    4ர்ம்யாத்  யுத்3தா4த்  தர்மத்திலிருந்து விலகாத யுத்தத்தைக் காட்டிலும்  

क्षत्रियस्य   க்ஷத்ரியஸ்ய  க்ஷத்திரியனுக்கு  अन्यत्  அன்யத்  வேறு  श्रेय:   ச்1ரேய:  சிறப்பு  

विद्यते     வித்3யதே   இல்லை.


ஸ்வதர்மத்தை நோக்குமிடத்தும் நீ மனம் நடுங்கலாகாது. அறப்போரைக் காட்டிலும் வேறு சிறப்பு அரசனுக்கில்லை


பாரதியின் மொழிபெயர்ப்பு :

ஸ்வதர்மத்தை கருதியும் நீ நடுங்குதல் இசையாது. அறப்போரைக் காட்டிலும் உயர்ந்ததொரு நன்மை மன்னர்க்கில்லை.


விளக்கம்:

=> தர்மம்:

      சாமான்ய தர்மம் (அனைவருக்கும் பொதுவானது):

* அஹிம்சை, சத்தியம், திருடாமை, தூய்மை.

      விஷேஷ தர்மம் அல்லது ஸ்வ தர்மம்  (காலத்துக்கு காலம், மனிதனுக்கு மனிதன் மாறுபடும்) :

* வானப்ரஸ்தம் - கடமைகளைத் துறத்தல், தவம்

* க்ஷத்ரியன் - நாட்டைக் காத்தல்


எந்த மனிதன் எந்தச் செயலுக்கு நன்கு தகுதியுடையவனாகிறானோ அச்செயல் அவனது ஸ்வ-தர்மம்; அதாவது ஒருவனது கடமை அவனது ஸ்வதர்மம் ஆகிறது. விஷேஷ(ஸ்வ) தர்மம் சாமான்ய தர்மத்தோடு முரண்பட்டால், சாமான்ய தர்மத்தை த்யாகம் செய்ய வேண்டும்


=> முந்தய ஸ்லோகங்களில் அர்ஜுனன் தர்மத்தைக் குறித்தும், போரின் விளைவாக சமுதாயத்தில் குழப்பம் நேரிட வாய்ப்புள்ளது என்றும் கூறியிருந்தான். அதற்கு பதிலளிக்கும் விதமாக க்ருஷ்ணர் இங்கு ஒருவன் தனது கடமையை, ஸ்வதர்மத்தை செய்வதில் நடுங்குதல் கூடாது(விகம்பிதும் அர்ஹஸி) என்கிறார். அறம் காத்தல் அரசனின் ஸ்வதர்மம். க்ஷத்ரியனான அர்ஜுனன், பாண்டவர்களுக்கு ராஜ்ஜியத்தை தர மறுத்த துரியோதனனின் அதர்மத்தை தொடர அனுமதித்தல் கூடாது. தர்மத்தை நிலைநாட்டும் தனது கடமையை, நிறைவேற்றும் பொருட்டு நடைபெறும் இந்த தர்ம-யுத்தத்தை விட ஒரு க்ஷத்ரியனுக்கு வேறு சிறப்பு எதுவும் கிடையாது(க்ஷத்ரியஸ்ய அன்யத் ச்1ரேய: வித்3யதே).

---------------------------------------------------------------------------------------------------------

।।2.32।। தர்ம யுத்த வாய்ப்பே அரிது:

यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतम्

सुखिन: क्षत्रिया: पार्थ लभन्ते युद्धमीदृशम् ।। ३२

யத்3ருச்ச2யா சோபபன்னம் ஸ்வர்க3த்3வாரமபாவ்ருதம்

சுகி2: க்ஷத்ரியா: பார்த்த2 லப4ந்தே யுத்34மீத்3ருச1ம் ।। 32


पार्थ   பார்த்த2  பார்த்தா  यदृच्छया   யத்3ருச்ச2யா  தற்செயலாய் उपपन्नं   உபபன்னம்  நேர்ந்துள்ள  

अपावृतम्   அபாவ்ருதம் திறந்துள்ள   स्वर्गद्वारम्   ஸ்வர்க3த்3வாரம் சொர்க்கவாயில்  

ईदृशम्   ஈத்3ருச1ம்  இதுபோன்ற   युद्धम्  யுத்34ம் யுத்தம்  सुखिनசுகி2அதிர்ஷ்டமுடைய  

क्षत्रिया:   க்ஷத்ரியா:  க்ஷத்ரியர்கள் தான்   लभन्ते   லப4ந்தே  அடைகிறார்கள்.


பார்த்தா, தற்செயலாய் நேர்ந்ததும், திறந்த சொர்க்கவாயில் போன்றதுமான இதுபோன்ற யுத்தத்தை அதிர்ஷ்டமுடைய க்ஷத்ரியர்களே அடைகிறார்கள்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

தானே வந்தெய்துவது, திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில் போன்றது, இத்தகைய போர் கிடைக்கப் பெறும் மன்னர் இன்ப முடையார்.


விளக்கம்:

=> கடமையை செய்தலின் பலன்:

தர்ம சாஸ்திரப்படி, ஒருவன் தான் செய்ய வேண்டிய கடமையை சரியாகவோ விபரீதமாகவோ செய்தால் அது அவனுக்கு ஒரு குறிப்பிட்ட கர்ம-பலத்தை கொடுக்கிறது. நேரடியாக கண்முன்  அனுபவிக்கும் பலன் த்ருஷ்ட பலன் எனவும், பிற்காலத்தில் அனுபவிக்கும் பொருட்டு நம் கணக்கில் சேர்க்கப்படும் கண்ணிற்கு தெரியாத பலன் அத்ருஷ்ட பலன் எனவும் கூறப்படும். மேலும் தனது கடமையை சரியாக செய்து மரணமடைந்தவன் அதன் பலனாக சொர்க்கத்தை அடைவான் என உறுதி கூறுகிறது

யத்3ருச்சா2 என்பது தற்செயல், அதாவது நமது எதிர்பார்ப்போ அல்லது விருப்பமோ இன்றி தற்செயலாய் நடப்பது. இங்கு க்ருஷ்ணர், உனது கடமையை முறையாகச் செய்தால் சொர்க்கம் பலன். ஆகவே பார்த்தா, உனது எதிர்பார்ப்பில்லாமல் தற்செயலாய் உனக்காக சொர்க்கவாயில் திறந்துள்ளது(ஸ்வர்க3த்3வாரம் அபாவ்ருதம்). இது போன்ற யுத்தம் அதிர்ஷ்டமுடைய க்ஷத்ரியர்களுக்குத் தான் கிடைக்கும்(ஈத்3ருச1ம் யுத்34ம் சுகி2: க்ஷத்ரியா: லப4ந்தே) என்கிறார்.

இது போன்ற தற்செயலாய் வந்தமையும் அனுகூலமான காலம் எல்லா மனிதர்களுக்கும் எப்போதாவது வந்தமைய வாய்ப்புள்ளது. இதை பயன்படுத்த தெரிந்து கொள்பவனே இவ்வுலகில் சீரும் சிறப்பும் அடைகிறான். இதுபோன்ற வாய்ப்பை பயன்படுத்தாமல் போனால் வரும் விளைவு குறித்து இனி எச்சரிக்கிறார்.

-------------------------------------------------------------------------------------

।।2.33।। ஸ்வதர்மத்தை செய்யாததன் விளைவு:

अथ चेत्त्वमिमं धर्म्यं सङ्ग्रामं करिष्यसि  

तत: स्वधर्मं कीर्तिं हित्वा पापमवाप्स्यसि ।। ३३

அத2 சேத்த்வமிமம் 4ர்ம்யம் ஸங்க்3ராமம் கரிஷ்யஸி

தத: ஸ்வத4ர்மம் கீர்த்திம் ஹித்வா பாபமவாப்ஸ்யஸி ।। 33


अथ चेत्   அத2 சேத்  ஒருகால்   त्वम्  த்வம்  நீ   इमं  இமம் இந்த   धर्म्यं सङ्ग्रामं   4ர்ம்யம் ஸங்க்3ராமம்  தர்மத்திற்குட்பட்ட யுத்தத்தை   करिष्यसि  கரிஷ்யஸி  செய்யவில்லை எனில்   ततததஅதனால்  

स्वधर्मं कीर्तिं   ஸ்வத4ர்மம் கீர்த்திம்    உனது தர்மத்தையும் புகழையும்    हित्वा   ஹித்வா  இழந்து   

पापम्  பாபம்   பாபத்தை   अवाप्स्यसि   அவாப்ஸ்யஸி    அடைவாய்.


ஒருகால் இந்த தர்மத்திற்குட்பட்ட யுத்தத்தை நீ செய்யவில்லை எனில் அதனால் ஸ்வதர்மத்தையும் புகழையும் இழந்து பாபத்தை அடைவாய்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

அன்றி நீ இந்த தர்ம யுத்தத்தை நடத்தாமல் விடுவாயானால், அதனால் ஸ்வதர்மத்தையும் கீர்த்தியையும் கொன்று பாவத்தை யடைவாய்.


விளக்கம்:

=> இத்தகைய போர் புரிவதன் மூலம் பாபத்தை தான் அடைவேன் என அர்ஜுனன் கூறியிருந்தான். அதற்கு பதிலுரைக்கும் விதமாக க்ருஷ்ணர், நீ இந்த அறப்போரை(4ர்ம்யம் ஸங்க்3ராமம்) செய்யாமற் போனால் உனது கடமையிலிருந்து வீழ்ந்தவனாகின்றாய். இது உனக்கு பாபத்தையே அடைவிக்கும்; உனது புகழையும் அழிக்கும் என்கிறார்.

=>  அதர்மத்தை செய்பவன் கேட்டை அடைகிறான். தனது கடமையாக வரும் தர்மத்தைத் தக்க தருணத்தில் செய்யாதவன் அதனினும் பெருங்கேட்டை அடைகிறான். தகுந்ததைச் செய்யாமையால் வரும் தீங்கானது, தகாததைச் செய்வதால் வரும் தீமையைவிடப் பெரிது.

-----------------------------------------------------------------------------------------

।।2.34।। கடமையை செய்யாததன் இஹ லோக விளைவு:

अकीर्तिञ्चापि भूतानि कथयिष्यन्ति तेऽव्ययाम्

सम्भावितस्य चाकीर्तिर्मरणादतिरिच्यते ।। ३४

அகீர்த்திம் சாபி பூ4தானி கத2யிஷ்யந்தி தேऽவ்யயாம்

ஸம்பா4விதஸ்ய சாகீர்த்திர்மரணாத3திரிச்யதே ।। 34


अपि   அபி   மேலும்  भूतानि  பூ4தானி உயிர்கள்(மானுடர்கள்ते  தே  உன்னை  

अव्ययाम्   அவ்யயாம்  எப்போதும்  अकीर्तिं   அகீர்த்திம்  இகழ்ந்து  कथयिष्यन्ति  கத2யிஷ்யந்தி  பேசுவார்கள்   

सम्भावितस्य  ஸம்பா4விதஸ்ய போற்றுதலுக்குரிய ஒருவனுக்கு  अकीर्तिஅகீர்த்தி: தூற்றுதல் 

मरणात्    மரணாத்  மரணத்தை காட்டிலும்       நிச்சயமாக   

अतिरिच्यते   அதிரிச்யதே   அதிகமானது(மோசமானது).


மானுடர்கள் உன்னை எப்போதும் இகழ்ந்து பேசுவார்கள். போற்றுதலுக்குரிய தூற்றப்படுவது இறப்பதிலும் இழிவே


பாரதியின் மொழிபெயர்ப்பு :

உலகத்தார் உனக்கு மாறாத வசையு முரைப்பார்கள். புகழ் கொண்டோன் பின்ன ரெய்தும் அபகீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?


விளக்கம்:

=> இகழுடன் வாழ்தல் கொடிது:

பூ4தானி என்பது உடனிருக்கும் மற்ற மனிதர்களைக் குறிக்கும். அதாவது போர்களத்திலிருக்கும் வீரர்கள் மட்டுமல்ல, சாதாரண மக்களும் கூட அர்ஜுனனைப் பற்றிய அவரவர்களின் சொந்த கருத்துக்களுடன் கூடிய அனைத்து விதமான கற்பனைக் கதைகளை உரைப்பார்கள்(கத2யிஷ்யந்தி). இவ்வாறு வேகமாக பரவும் இந்த வதந்திகளையும் வசவுகளையும்(அகீர்த்தி:) மக்கள் இனி வருங்காலங்களிலும் தொடர்ந்து பேசுவார்கள்(அவ்யயாம்). அர்ஜுனனைப் போன்ற புகழுடன் கூடிய ஒருவனுக்கு அபகீர்த்தியுடன் வாழ்வதென்பது நிச்சயமாக மரணத்தைக் காட்டிலும் கொடியது(அகீர்த்தி: மரணாத் அதிரிச்யதே).  

-------------------------------------------------------------------------------------

 ।।2.35।।  உலகில் பழிப்பவர்கள் தங்களின் மனதிற்கு தோன்றியதையெல்லாம் கூறிப் பழிப்பார்கள்

भयाद्रणादुपरतं मंस्यन्ते त्वां महारथा:

येषां त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम् ।। ३५

4யாத்3ரணாது3பரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா2:

யேஷாம் த்வம் 3ஹுமதோ பூ4த்வா யாஸ்யஸி லாக4வம் ।। 35


महारथा:   மஹாரதா2:    மகா வீரர்களும்   त्वाम्  த்வாம்   உன்னை  भयात्  4யாத்  பயத்தினால்   

रणात्    ரணாத்  யுத்தத்திலிருந்து   उपरतम्  உபரதம்  பின்னடைந்தவன் (என்று)  

मंस्यन्ते  மம்ஸ்யந்தே   நினைப்பார்கள்   येषाम्  யேஷாம்   எவர்களிடத்தில்   त्वम्   த்வம்  நீ  

बहुमत:  3ஹுமத:  பெருமதிப்பை   भूत्वा  பூ4த்வா  பெற்றிருந்தாயோ  

लाघवम्   லாக4வம்  (அவர்களிடத்தில்) சிறுமையை   यास्यसि    யாஸ்யஸி   அடைவாய்.


பயத்தினால் போரிலிருந்து பின்வாங்கினாயென்று மஹாரதர்கள் எண்ணுவார்கள். எவர்களிடத்தில் நீ பெருமதிப்பை பெற்றிருந்தாயோ அவர்களிடத்தில் சிறுமையை அடைவாய்


பாரதியின் மொழிபெயர்ப்பு :

நீ அச்சத்தால் போரை விட்டு விலகியதாக மஹாரதர் கருதுவார்கள். அவர்களுடைய நன்கு மதிப்பைப் பெற்ற நீ இதனால் சிறுமை யடைவாய்.


விளக்கம்:

=> மஹாதேவனை எதிர்த்துப் போர்புரிந்தவன் என்றும், பாசுபதாஸ்திரத்தைப் பெற்றவன் என்றும் துரியோதனன் முதலியோரும் அர்ஜுனனின் வீரத்தை பாராட்டி வந்துள்ளார்கள். இந்த நெருக்கடியான சூழலில், அன்பின் வழியில் அர்ஜுனன் போரிலிருந்து பின்வாங்கினான் என இவர்கள் பொருள்படுத்தமாட்டார்கள். அஞ்சிப் புறங்காட்டி ஓடினான் என்றே இகழ்வார்கள்(4யாத் ரணாத் உபரதம்). போற்றுதல் மிக எளிதாக தூற்றுதலாக(லாக4வம்) மாறிவிடும். வருத்தத்தை அளிக்கும் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுதல் தகாது.

-----------------------------------------------------------------------------------------------------------------------

।।2.36।। மேலும் இவ்விதம் பழிப்பார்கள்:

अवाच्यवादांश्च बहून् वदिष्यन्ति तवाहिता:

निन्दन्तस्तव सामर्थ्यं ततो दु:खतरं नु किम् ।। ३६

அவாச்யவாதா3ம்ச்1 3ஹூன் வதி3ஷ்யந்தி தவாஹிதா:

நிந்த3ந்தஸ்தவ ஸாமர்த்2யம் ததோ து3:2தரம் நு கிம் ।। 36


तव  தவ   உன்னுடைய   अहिता:   அஹிதா:   பகைவர்களும்   तव  தவ   உன்னுடைய   

सामर्थ्यं   ஸாமர்த்2யம்  திறமையை   निन्दन्त:    நிந்த3ந்த:   பழிப்பவர்களாக    बहून्   3ஹூன்   பல   अवाच्यवादान्    அவாச்யவாதா3ன்  சொல்லத்தகாத வார்த்தைகளை    वदिष्यन्ति   வதி3ஷ்யந்தி   பேசுவார்கள்   तत:   தத:  அதைக்காட்டிலும்   दु:खतरं   து3:2தரம்  பெருந்துன்பம்   किंनु   கிம் நு   இருக்கிறதா


உன்னுடைய பகைவர்களும் உன் சாமர்த்தியத்தை நிந்திப்பவர்களாக பல சொல்லத்தகாத வார்த்தைகளைச் சொல்வார்கள். அதைக்காட்டிலும் பெருந்துன்பம் என்ன இருக்கிறது


பாரதியின் மொழிபெயர்ப்பு :

உனக்கு வேண்டாதார் சொல்லத் தகாத வார்த்தைகள் பல சொல்லுவார்கள். உன் திறமையைப் பழிப்பார்கள். இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது?


விளக்கம்:


=> அர்ஜுனனை புகழ்ந்து பேசியவர்கள், இனி இகழ்ந்து பேச தயங்க மாட்டார்கள். பெருவாரியாக வரும் வசைச் சொற்கள் அவனை இடையுறாது துன்புறுத்திக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட சிறுமையையும் துன்பத்தையும் வலிய வருவித்துக் கொள்வானேன்?

-----------------------------------------------------------------------------------------

।।2.37।। தர்மாதர்ம விளக்கத்தின் முடிவுரை:

हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम्

तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चय: ।। ३७ 

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்க3ம் 

ஜித்வா வா போ4க்ஷ்யஸே மஹீம்

தஸ்மாது3த்திஷ்ட2 கெளந்தேய 

யுத்3தா4 க்ருதநிச்1சய: ।। 37


हत: वा   ஹத: வா கொல்லப்பட்டாலோ  स्वर्गं   ஸ்வர்க3ம்  ஸ்வர்க்கத்தை प्राप्स्यसि   ப்ராப்ஸ்யஸி  அடைவாய்  जित्वा वा  ஜித்வா வா  வென்றால்  महीम्   மஹீம்  பூமியை  भोक्ष्यसे   போ4க்ஷ்யஸே அனுபவிப்பாய்   

तस्मात्   தஸ்மாத்  ஆகவே  कौन्तेय   கெளந்தேய  குந்தியின் புதல்வா  युध्दाय   யுத்3தா4  யுத்தத்தின் பொருட்டு  कृत-निश्चय:  க்ருதநிச்1சய:  நிச்சயித்துக்கொண்டு   उत्तिष्ठ    உத்திஷ்ட2  எழுந்திரு.


போரில் மடிந்தால் ஸ்வர்க்கத்தைப் பெற்றிடுவாய், வென்றால் பூமியை அனுபவிப்பாய். ஆகவே குந்தியின் புதல்வா, போரின் பொருட்டு உறுதிகொண்டு எழுந்திரு.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

கொல்லப் படினோ வானுல கெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செய்யத் துணிந்து நீ எழுந்து நில்.


விளக்கம்:

=> இது போன்ற அறப்போரில், ஒன்று மரணம் நேரலாம் அல்லது வெற்றி கிடைக்கலாம். இங்கு க்ருஷ்ணர் இந்த இரண்டு வித சாத்தியங்களைக் கூறி அதன் பலனை எடுத்துரைக்கிறார். ஒருவேளை நீ போரில் கொல்லப்பட்டால்(ஹத: வா) சொர்க்கத்தை அடைவாய்(ஸ்வர்க3ம் ப்ராப்ஸ்யஸி). தர்ம-சாஸ்திரப்படி கடமையை செய்யும் பொருட்டு உயிர் துறப்பவன் சொர்க்கத்தை அடைகிறான். ஒருகால் நீ வெற்றி பெற்றால் ராஜ்ஜியத்தை அடைவாய்(ஜித்வா வா மஹிம் போ4க்ஷ்யஸே). அர்ஜுனா, இவையிரண்டில் எது நடக்கினும் உனக்கு தோல்வியில்லை. ஆகவே போரின் பொருட்டு உறுதிகொண்டு எழுந்திரு(யுத்3தா4 க்ருதநிச்1சய: உத்திஷ்ட2).

-----------------------------------------------------------------------------------------

।।2.38।। கர்ம யோக சாதனை(கடமையை செய்யும் பொழுது கொள்ள வேண்டிய பாவனை):

सुखदु:खे समे कृत्वा लाभालाभौ जयाजयौ

ततो युद्धाय युज्यस्व नैवं पापमवाप्स्यसि ।। ३८

சுகது3:கே ஸமே க்ருத்வா லாபா4லாபெள4 ஜயாஜயெள

ததோ யுத்3தா4 யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி ।। 38


सुखदु:खे   சுகது3:கே  சுகதுக்கங்களை  लाभालाभौ    லாபா4லாபெள4     லாப நஷ்டங்களையும்   

जयाजयौ    ஜயாஜயெள  வெற்றி தோல்விகளையும்   समे   ஸமே  சமமாக  कृत्वा  க்ருத்வா கருதி   

तत:   தத:  பிறகு   युद्धाय  யுத்3தா4   யுத்தத்தில்   युज्यस्व   யுஜ்யஸ்வ  (உன்னை) ஈடுபடுத்து  

एवम्    ஏவம்  இங்ஙனம்  पापम्   பாபம்  பாபத்தை  अवाप्स्यसि    அவாப்ஸ்யஸி  அடையமாட்டாய்.


இன்பம் துன்பம், லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி ஆகியவைகளைச் சமமாகக் கருதி போரில் உன்னை ஈடுபடுத்து. இங்ஙனம் பாபத்தை அடையமாட்டாய்.


பாரதியின் மொழிபெயர்ப்பு :

இன்பம், துன்பம், இழவு, பேறு, வெற்றி, தோல்வி; இவற்றை நிகரெனக் கொண்டு நீ, போர்க் கொருப் படுக. இவ்வண்ணம் புரிந்தால் பாவ மெய்தாய்.


விளக்கம்:

=> கர்ம யோகத்தின் விதை:

சுக-துக்கம் என்னும் இருமையைச் சமமாக, ஒன்றைப் போல கருத வேண்டும் என்ற கர்ம யோகத்தின் விதை இங்கு விதைக்கப்படுகிறது. முழு கீதையும், துயரத்திற்கு காரணமாக விளங்கும் விருப்பு-வெறுப்பு(ராக-த்வேஷம்) எனும் உளவியலை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. துரியோதனன் ராஜ்ஜியத்தின் மீதுள்ள விருப்பத்தினாலும், பாண்டவர்களின் மீதுள்ள வெறுப்பினாலும் போரில் ஈடுபடுகிறான். க்ருஷ்ணர், அர்ஜுனனை இந்த விருப்பு வெறுப்பிற்கு எதிராக, எது செய்யப்பட வேண்டுமோ அதை செய்யும் பொருட்டு, ஸ்வதர்மத்திற்காக போரில் ஈடுபடு(யுத்3தா4 யுஜ்யஸ்வ) என்கிறார்.


सम्यक् ख्यायते सा वैदिकी सम्यग्बुद्धि: साङ्ख्या। तया प्रकाश्यत्वेन सम्बन्धि तत्त्वं साङ्ख्यम्।

तद्विषया बुद्धि: साङ्ख्यबुद्धि: सा साङ्ख्यबुद्धि: येषां ज्ञानिनाम् उचिता भवति ते साङ्ख्या:

ப்ரம்மம் மற்றும் ப்ரம்ம ஞானம் சாங்க்யம். ப்ரம்ம ஞானத்தை உடைய ஞானிகள் சாங்க்யர்கள். இதுவரையில் ஆத்ம சொரூபத்தை விளக்கிய பகவான் இங்கு, கர்ம யோகத்தின் தொடக்கமாக சுக-துக்கம், வெற்றி-தோல்வி, லாப-நஷ்டம் இவற்றை சமமாக பாவித்து கடமையை செய்பவன் பாபத்தை அடைவதில்லை(ஸமே க்ருத்வா ஏவம் பாபம் அவாப்ஸ்யஸி) என்கிறார். சுகத்தை தரும் வெற்றி, லாபம் போன்றவற்றில் விருப்பமும், துக்கத்தை தரும் தோல்வி, நஷ்டம் இவற்றில் வெறுப்பும் கொள்வது பாமரர் இயல்பு. இந்த இருமைகளை சமமாகக் கருதி, நடுநிலையுடன் கர்மத்தில் அல்லது கர்மபலனில் பற்றில்லாது செயல் செய்யும் மனநிலை முக்திக்கு மார்க்கமாகிறது. உலகப்பற்றுடைய ஒருவன் செய்கிற அதே கர்மத்தைக் கர்மயோகியும் செய்கிறான். ஆனால் மனநிலையில் இருவருக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒருவனது மனநிலையைக் கொண்டுதான் எது பந்தம், எது பற்றற்ற தன்மை என்று தெரிந்து கொள்ள முடியும்.

----------------------------------------------------------------------------------------