வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

வேதாந்தம் ஓர் அறிமுகம் - 3

(9) ஸ்ரவணம் (சாஸ்திரம் கேட்டல்):

       உபநிஷத்தில் பேசப்படும் கருத்துக்களை நான்காகப் பிரிக்கலாம்:

       [1] ஜீவ விசாரம்     [2] ஈஷ்வர விசாரம் [3] ஜீவ – ஈஷ்வர சம்பந்தம்       [4] பல விசாரம்


  [1] ஜீவ விசாரம்:

        ஜீவன் – உயிர் வாழ்பவன் (நான்), ஜீவன் = ஆத்மா + அனாத்மா.

        ஆத்மா - சேதனத் தத்துவம், அறிவு, Consciousness

        அனாத்மா - அசேதனத் தத்துவம், அறிவற்றது, ஜட சொரூபம்.

     (i) அனாத்மா


   

   1. ஸ்தூல சரீரம் (உடல்):

        பஞ்ச பூதங்களினால் (ஆகாசம், வாயு, அக்னி, நீர், ப்ருத்வி) செய்யப்பட்டது. உடல் ஆரோக்கியம்,  நிறம், பாலினம் முதலிய வேறுபாட்டிற்கு காரணம் அவரவர்களின் கர்ம பலன்.

    ஸ்தூல உடல் அடையும் 6 வித மாறுபாடுகள்:

Ø  அஸ்தி             -  காரணமாக கர்பத்தில் இருத்தல் (தாயினுடைய வயிற்றில்)

Ø  ஜாயதே           - பிறத்தல்

Ø  வர்ததே            - வளர்தல்

Ø  விபரிணமதே   - மாற்றத்தை அடைதல் (வளர்ச்சி நின்ற பிறகு) 

Ø  அபக்ஷீயதே      - தேய்தல்

Ø  வினஷ்யதி        - மடிதல்

போகத்தை அனுபவிக்கும் வீடு ஸ்தூல சரீரம் (போக ஆயதனம்).


   2. சூக்ஷம சரீரம் (மனம்):

       போகத்தை அனுபவிக்கும் கருவி சூக்ஷம சரீரம்(போக சாதனம்).

       19 அவையவங்கள் சேர்ந்தது சூக்ஷம சரீரம். அவை


           


    3. காரண சரீரம் (நிர்விகல்ப சொரூபம்):

       எது ஸ்தூலத்திற்கும், சூக்ஷமத்திற்கும் காரணமோ(எதிலிருந்து ஸ்தூல சூக்ஷமம் வந்ததோ) அதுவே காரண சரீரம். மரத்திற்கு விதை எப்படி காரணமோ அதுபோல. விதையில் கிளை, இலை, கொடி என்ற வேறுபாடு கிடையாது.

         *  நிர்விகல்பம் – விகல்பம் அற்றது – வேறுபாடு அற்றது

         *  எப்போது தோன்றியது எனில் அநாதி, அதாவது அதன் தோற்ற காலத்தை கூற முடியாது.

         

         => பஞ்ச கோஷம்:

               இந்த மூன்று சரீரமும் சேர்த்து ஐந்தாகப் பிரிக்கப்படுகிறது. அது பஞ்ச கோஷம் எனப்படும். 

               கோஷ: - உறை (அனாத்மா ஆத்மாவை உறை போல மறைப்பதால்)

            (i)  அன்னமய கோஷம் -  ஸ்தூல சரீரம்

            (ii)  பிராணமய கோஷம் – 5 பிராணன் + 5 கர்மேந்திரியங்கள்

            (iii)  மனோமய கோஷம் – மனம் + 5 ஞானேந்திரியங்கள்

            (iv)  விக்ஞானமய கோஷம் – புத்தி + 5 ஞானேந்திரியங்கள்

            (v)  ஆனந்தமய கோஷம் – காரண சரீரம்


    => அவஸ்தா த்ரயம் (ஜீவனுக்குள்ள மூன்று வித அனுபவங்கள்):

       (i)    ஜாக்ரத் – விழிப்பு நிலை (waking state) [ஸ்தூல உடல் வரை அபிமானம் இருக்கும்போது]

       (ii)  ஸ்வப்ந – கனவு நிலை [சூக்சம சரீரம் வரை அபிமானம்]

       (iii)  சுசுப்தி – ஆழ்ந்த உறக்கம் (காரண சரீர அபிமானம்; அறியாமை + ஆனந்தம்)


(ii) ஆத்ம விசாரம்

      ஆத்மா ஞான(அறிவு) சொரூபம்.

     

       ஆத்மாவின் லக்ஷணங்கள்:

(i)   த்ருக் - அறிபவன்

(ii)  சித் – அறிவு மயம்

(iii)  நிர்விகாரம் - மாற்றமற்றது

(iv)  ஏகம் - ஒன்று

(v)   ஸத்யம் - உண்மை


       அனாத்மாவின் லக்ஷணங்கள்:

(i)   த்ருஷ்யம் - அறியப்படுவது

(ii)  ஜடம் – அறிவற்றது

(iii)  ஸவிகாரம் - மாறுவது

(iv)  அனேகம் - பலவானது

(v)   மித்யா – வெறும் தோற்றம்


*  ஆத்மா மற்றும் அனாத்மாவிற்கிடையேயான சம்பந்தம் என்ன? 

    (1) ஸ்படிகம் – மலர்; ஸ்படிகத்தில் எதிரொலிக்கும் மலரின் நிறத்தை போன்று அனாத்மா ஆத்மாவின் மீது ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. 

    (2) கயிறு - பாம்பு; மங்கிய வெளிச்சத்தில் கயிற்றில் தெரியும் பொய்யான பாம்பை போல அறியாமையினால் அதிஷ்டானமான ஆத்மாவின் மீது மித்யாவான அனாத்மா தெரிந்து கொண்டுள்ளது.


[2] ஈஷ்வர விசாரம்:       

      இந்த உலகிற்கு காரணமானவர்.

        ஈஷ்வரன் = ப்ரம்ம (சேதன) + மாயா (அசேதன)


      => ஜட சொரூபமான மாயையின் லக்ஷணங்கள்:

(i)  த்ரி குண ஆத்மிகா (சத்வம், ரஜஸ், தமஸ்)

(ii)  காரண பிரபஞ்சம் (ஸ்தூல, சூக்ஷம, காரணம்)

(iii)  அநாதி ( தோற்றம் கிடையாது)

(iv)   ப்ரம்மாஸ்ரயம் (ப்ரம்மத்தை சார்ந்து உள்ளது, தனித்து செயல்படாது)


    மாயையும், ப்ரம்மமும் சேரும் தத்துவம் => ஜகத் காரணமானவர்




  ஈஷ்வரன் 2 வகையான காரணமாகவும் இருந்து இந்த உலகைப் படைத்துள்ளார்.


   => சிருஷ்டி:

          ஈஷ்வர மாயா அம்சத்திலிருந்து சிருஷ்டி தோன்றுகிறது. 

            காரண நிலை ---> சூக்ஷம நிலை ---> ஸ்தூல நிலை

   பஞ்ச சூக்சம பூத சிருஷ்டி:

           மூன்று குணத்தை (சத்வ, ரஜஸ்,  தமஸ்) உடைய 5 சூக்சம பூதங்கள் தோன்றியது.



  => மூன்று குணங்களின் தன்மைகள்:

         (i) சத்வம்   =>  அறிவு, ஞானம் (Power to know)

         (ii)  ரஜோ  =>  செயல்படும் சக்தி (Activity – Power to act)

         (iii)  தமோ  => ஜட தன்மை


  => பிரபஞ்ச தோற்றம்:

    ஐந்து சூக்சம பூதங்களின்,

         *  சத்வ குணத்திலிருந்து => ஜீவர்களின் அந்தக்கரணம் + 5 ஞானேந்திரியங்கள் வந்தன.

         *  ரஜோ குணத்திலிருந்து => கர்மேந்திரியங்கள் + ப்ராணன் படைக்கப்பட்டது.

         *  தமோ குணத்திலிருந்து => ஸ்தூல சரீரம் வந்தது.  

            (*) பஞ்சீகரணம் => 5 சூக்சம தமோ குணத்தின் கலவை ஸ்தூல பிரபஞ்சம். தத்துவபோதம் என்கிற நூலில் சிருஷ்டி தோன்றிய விதம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.


=> ப்ரம்ம சொரூப லக்ஷணங்கள்:

      (i)   ஸத்யம் (இருத்தல்)

     (ii)   ஞானம் (அறிதல்)

     (iii)  அனந்தம் (எல்லையற்றது; ஆனந்தம்)

* அனாத்மாவின் நோக்கில்,  ஈஸ்வரன் படைத்தவன், நாம் படைக்கப்பட்டவர்கள்.

* ஆத்மாவின் நோக்கில்,  ஈஸ்வரனும் நானும் ஐக்கியம்.

பாகம் - 4

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------